கலிபோர்னியாவில் காட்டுத்தீயினால் 10,000 பேர் இடம்பெயர்வு!

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக சுமார் 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அங்கு காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான் பிரான்ஸிஸ்​கோ குடாப்பகுதியிலுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கத்தினால் தீ பரவி வருவதாக தகவல் வௌியாகியுள்ளது.

105 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், 53 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவுள்ள வனப்பகுதி முற்றிலுமாக எரிந்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.

சுமார் 22,000 பேருக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கலிபோர்னியாவின் வன மற்றும் தீ பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கலிபோர்னியாவில் சாதாரண வெப்பநிலை 2 பாகை செல்ஷியஸால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts