ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

டிக்கோயா ஆற்றில் இன்று (21) ஆணின் சடலம் ஒன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 40 – 35 இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts