வவுனியாவில் சடலம் மீட்பு!

வவுனியா – பறயனாலங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைக்கு அருகாமையில், அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இன்று (20) காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பறயனாலங்குளம் வீதிக்கரையில் இருந்த சிறிய கொட்டில் ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் இருப்பதனை அவதானித்த பொலிஸார், சடலத்தினை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மேலும், மீட்கப்பட்ட நபரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் சடலத்தினை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், அப்பகுதிகளை சேர்நத கிராம சேவகர்களை அழைத்து சடலத்தினை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts