கொட்டகலையில் கொள்ளைச் சம்பவம்!

கொட்டகலை வூட்டன் நகரில் அமைந்துள்ள சமையல் எரிவாயு நிரப்பும் நிலையம் மற்றும்  சில்லறை கடை ஆகியவற்றில் இன்று (20) அதிகாலை இனந்தெரியாதவர்களால் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்கொள்ளைச் சம்பவத்தின்போது சில்லறை கடையில் சிகரட், உட்பட காசு என மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், சமையல் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் 70000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

கடைகளில் முன்புறத்தில் உள்ள இரும்பு கதவு போன்றன உடைத்து முன் வழியாக கடைக்கு நுழைந்தே இக் கொள்ளை இடம்பெற்றுள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts