வாழைச்சேனையில் உணவு பாதுகாப்பு செயலமர்வு!

உணவு கையாளும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு சம்பந்தமான செயலமர்வு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளைச் சேர்ந்த உணவு கையாளும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் உணவு மருந்து பரிசோதகர்களான ரி.வரதன், என்.தேவநேசன், என்.விமலசேகரன் ஆகியோர் வளவாளர்களாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.எஸ்.நௌபர், ஜே.யசோதரன், ஏ.எல்.எம்.நஸிர், என்.எம்.சியான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையிலும், மக்கள் உணவகங்களுக்கு அதிகம் செல்லும் நிலையிலும் மக்கள் பாதுகாப்பு கருதி உணவு கையாளும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

Related posts