இந்தியாவில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

பட்டதாரிகள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று கல்விகற்று பட்டம் பெற்ற 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அண்மையில் அரச வேலைவாய்ப்பிற்காக தெரிவுசெய்யப்பட்ட 50 ஆயிரம்பட்டதாரிகளிற்கான பெயர்பட்டியல் அரசினால் வெளியிடப்பட்டிருந்ததுடன், நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளின் விபரங்களும் அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் இலங்கை போரின்போது இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்று அங்குள்ள பல்கலைகழகங்களில் படித்து பட்டம் பெற்று மீண்டும் நாடு திரும்பியவர்களின் விண்ணப்பங்களும் குறித்த பட்டியலில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 27, வவுனியா 18, யாழ்ப்பாணம் 66, முல்லைத்தீவில் 2 பேருமாக மொத்தம் 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பட்டம் என்ற காரணத்தை முன்வைத்தே அவர்களிற்கான தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன். பல்வேறு பாதிப்புகளை சந்தித்து அகதிகளாக சென்று கஸ்டத்தின் மத்தியில் படித்து பட்டம் முடித்து தாய் நாடு திரும்பிய நிலையிலும் தமது தொழில் வாய்ப்பு தட்டிக்கழிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related posts