வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை இனி இல்லை!

வாகனங்களுக்கான வருவாய் உரிமங்களை வழங்குவதற்குத் தேவையான புகை சோதனை உரிமங்களை அகற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

வாகனப் புகை பரிசோதனைக்கான உரிமம் தேவையா, இல்லையா என்பது குறித்து விவாதித்த பின்னர் எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என இந்த விடத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

புகை சோதனை அனுமதி இருந்தபோதிலும், நெடுஞ்சாலையில் அதிகமான புகை வழித்தடங்கள் காணப்படுவதாகவும் குறித்த செயற்பாட்டில் ஏதோ தவறு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த திட்டத்தை மாற்றவேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts