மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்!

மின் உபகரணங்களின் பாவனையை காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியினுள் மட்டுப்படுத்துமாறு நுகர்வோரிடம், இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கெரவலபிட்டிய மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் (17) நாடு பூராகவும் மின் தடை ஏற்பட்டதோடு, நுரைச்சோலை மின் நிலையம் இன்னும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாடு பூராகவும் 04 நாட்களுக்கு இரவில் ஒரு மணி நேரமும் பகலில் தேவையேற்படின் 1.45 மணி நேரமும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோர்களிடம், இலங்கை மின்சார சபையின் தலைவர், பொறியியலாளர் விஜித ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts