மாலியில் இராணுவப்புரட்சி!

மாலியில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக மாலியில் பெரும் போரட்டம் நடந்து வந்தநிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டக்காரர்களுடன் சமரச முயற்சியில் ஈடுபட, இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா முயன்றபோதிலும், அது பலனளிக்கவில்லை.

Related posts