நல்லூரில் தம்பதியினர் கைது!

யாழ். நல்லூரில் நேற்று (18)   தீர்த்தத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு தொடர்பாக  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து வந்த கணவன், மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Related posts