தனிமைப்படுத்தல் காலம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

உலகம் முழுவதும் ஏறக்குறைய 20 மில்லியன் மக்களை பாதித்து, அதில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி, அனைத்து நாடுகளையும்  கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது.

இதனை பரவாமல் தடுப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம், இத்தகைய கொரோனா தொற்று பாதிப்புள்ளவர்கள், தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.  ஆனால் தற்போது இந்த நிலை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

மனிதர்களுடைய உடலுக்குள் உட்புகும் கொரோனா வைரஸ் கிருமிகள், 4 அல்லது 5 நாட்களுக்கு பிறகு தன்னுடைய பாதிப்பை அறிகுறியாக இதுவரை வெளிப்படுத்தியது. இதனால் கொரோனாத் தொற்று பாதிப்புள்ளவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.

அண்மைய ஆய்வுகளில் மனிதர்களின் உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் கிருமிகள், தங்களை விரிவுபடுத்திக்கொள்ள எட்டு நாட்கள் வரை எடுத்துக் கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அறிகுறியை வெளிப்படுத்துவதற்கு அதிக நாட்கள் நீடிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் தனிமைப் படுத்திக் கொள்வதை நீடிப்பது குறித்து உடனடியாக எந்த பரிந்துரையும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது கடைப்பிடிக்கப்பட்ட வரும் சமூக இடைவெளி, முகக்கவசம், கையுறை, சோப்பு போட்டுக் கொள்ளுதல்.. ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related posts