காய் கறிகளின் அரசன் – முருங்கை!

* ஏழைகளின் பயிர் முருங்கை மரம். முருங்கை மரத்திற்கு ‘பிரம்ம விருட்சம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. எல்லா இடங்களிலும் வளரும் மரம் இது.

* பஞ்ச பூத சக்திகள் முருங்கைக்காயில் மிகுந்து உள்ளதால் பல பிணிகளை விரட்டும் தன்மை கொண்டது. முருங்கைக்காயை சூப்பாக செய்து சாப்பிட்டால் அருமையான மருத்துவ குணங்களை அழியாமல் பெறலாம்.

* மனித நாடி, நரம்புகளை உரமேற்றி, மெருகேற்றுவது முருங்கை. கபத்தை வெளியேற்றும். உடலுக்கு அருமையான பலத்தை தரும். நலிவடைந்தவர்களுக்கும் பிணிகளால் நரம்பு தளர்ந்தவர்களுக்கும் முருங்கைக்காய் சூப் ஒரு வரப்பிரசாதம்.

* இரத்த விருத்திக்கு தினம் முருங்கைக்காய் சாப்பிட்டு வரலாம். சிறுவர், சிறுமியர் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் தவிர்க்கலாம். எலும்புருக்கி நோய் சரியாகும். பெண்களின் மாதவிடாய் நோய்கள், உதிரப்போக்கு முதலியன நீங்கும்.

* காக்காய் வலிப்பு நோயால் அவதியுறும் அன்பர்கள் அடிக்கடி அரை வேக்காடு பதத்தில் முருங்கைக்காய் சூப்பை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* நரம்பு பிரச்னை நோய் உள்ளவர்கள் முருங்கைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் பொட்டாசியம் சத்து மிகுந்து உள்ளதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.

* நீரிழிவு நோயாளிகள் நலத்திற்கு உத்திரவாதம் தரும் ஒப்பற்ற காய். மாலைக்கண் வியாதிகளை நீக்க வல்லது.

* கண்ணாடி அணிந்தவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் அதிகமாவதைத் தடுக்கலாம்.

Related posts