யாழில் 60 வருட பழமை வாய்ந்த சனசமூக நிலையமும், தொன்மையான பொருட்களும் எரிந்து நாசம்!

யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு சாந்தை கிராமத்தில் 1960 ஆண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சனசமூக நிலையம் இன்று மாலை 2.30 மணியளவில் இனந்தெரியாத விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதனால் 75 மேற்பட்ட கதிரைகள் மின்சார இணைப்புக்கள் கூரைப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன.

60 வருட பழமை வாய்ந்த இந்த பொக்கிசம் எரிக்கப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் விசனத்தை தெரிவிக்கின்றனர்.

Related posts