மட்டு. சிவானந்தா பாடசாலையில் தீ விபத்து!

மட்டு.கல்லடி, உப்போடையில் உள்ள சிவானந்தா தேசிய பாடசாலையில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மேலும் தெரியவருவதாவது.

மட்டு.கல்லடி, உப்போடையில் உள்ள சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இன்று (18) முற்பகல் சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தின் களஞ்சிய அறையில் திடீரென தீ ஏற்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்புபிரிவுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

குறித்த தீ ஏற்பட்டமை தொடர்பிலான காரணங்கள் இதுவரை தெரியவில்லையென குறித்த விளையாட்டு மைதானத்தினை நிர்வகிக்கும் சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் தெரிவித்தார்.

குறித்த களஞ்சிய அறையில் இருந்த விளையாட்டுக்குரிய பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts