தவறான ஜனாதிபதி டிரம்ப்: மிஷல் ஒபாமா விமர்சனம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா, ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நாட்டின் தவறான ஜனாதிபதி என்று சாடி உள்ளார்.

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடனுக்கு ஆதரவுக் குரல் தெரிவித்த மிஷல் ஒபாமா, நவம்பரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பைடனுக்கு வாக்களிக்குமாறு அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.

ட்ரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள பெருங்குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர இதுவே ஒரே வழி என்றார் அவர்.

“தலைமைத்துவம், ஆறுதல், நிலைமாறாத்தன்மை போன்றவற்றுக்காக வெள்ளை மாளிகையை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் கூச்சல், குழப்பம், பிரிவினை, இரக்கமின்மை ஆகியவையே ஏற்படுகிறது,” என்று கூறிய மிஷல் ஒபாமா, சிரமமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதி ட்ரம்ப்பால் முடியவில்லை என்று சொன்னார்.

“ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ள வெறுப்புணர்வையும் பிரிவினைவாதத்தையும் ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார். குடியேறிகளுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாட்டை அவர் நிறுத்துவார்,” என்றார் மிஷல் ஒபாமா.

Related posts