கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2900 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,900 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (17) 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

ஓமானிலிருந்து நாடு திரும்பிய இருவர் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 6 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனடிப்படையில், நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 2,676 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts