முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே 20 வருகிறது!

20வது அரசியல் திருத்தத்திற்கான அமைச்சரவை வரவை, புதிய அமைச்சரவையின் கன்னி அமர்விலேயே சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

20வது திருத்தத்தை தயாரிப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும், கன்னி அமைச்சரவையின் முன்னர் அதனை முழுமையாக தயாரித்து முடிக்க வேண்டியுள்ளதாகவும், தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர்குழுவை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

20வது திருத்தத்தின் மூலம் 18, 19வது திருத்தங்களை இரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் 20வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts