மின் தடை தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும்!

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் மின்வெட்டு தொடர்பில் மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபையிடம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இன்று பகல் 12.45 மணியிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வத்தளை-கெரவலப்பிட்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்தே குறித்த மின்தடை தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts