நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிப்பு!

கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறினால் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை வழமைக்கு திரும்புவதற்கு சுமார் 2 மணிநேரம் வரையில் தேவைப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts