உரும்பிராயில் பொலிஸார் மீது தாக்குதல்!

யாழ். உரும்பிராய், ஊரெழுப் பகுதியில் சந்தேக நபரை தேடி சென்ற நிலையில் அங்கு இடம்பெற்ற குழு மோதல் குறித்து விசாரிக்க முயன்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீதே இவ்வாறு கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

பொயிட்டி பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற பொலிஸார் அங்கு இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் விசாரிக்க முயன்ற போது, இருவர் மீதும் அங்கு நின்ற இளைஞர் குழு தாக்குதலை மேற்கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.

Related posts