கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொக்க்ஷி பாலத்துக்கு அருகில் இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் காலியில் ஒருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் .
வெள்ளவத்தை, காலி வீதி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.