பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் வீடு திரும்பினர்!

வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ​154 பேர் இன்று வீடு திரும்பினர்.

துபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களே இங்கு தனிமைப்படுத்தப்படிருந்தனர்.

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்று தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

தமது சொந்த இடங்களான, கம்பகஹா, கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை, களுத்துறை பகுதிகளுக்கு குறித்த 154 பேர் பேருந்துகள் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts