ஹெரோயினைக் கடத்திய இளம் ஜோடி கைது!

ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளை சிறுசிறு பொதிகளாக்கி  விற்பனை நோக்கத்திற்காக எடுத்துச் சென்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் கைது செய்யதாக பொலிசார் தெரிவித்தனர்.

21 வயதான இளம் பெண்ணும், 23 வயதான இளைஞனுமே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவென பொலிசார் தெரிவித்தனர். விசாரணைகள் நடக்கின்றன.

Related posts