மன்னாரில் உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உலர்ந்த மஞ்சள் மூட்டைகள்  கடற்படையினரால் இன்று நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒரு ரோந்துப் பணியின் போது, கடற்கரைக்கு அருகிலுள்ள புதர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சாக்குகள் பரிசோதனை செய்த போது 57.2 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த மஞ்சள் நிரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.

கைப்பற்றிய மஞ்சள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

Related posts