செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு படையினர் மற்றும் பொலீசாரின் அச்சுறுத்தலையும் மீறி உணர்வுபூர்வமாக நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

நினைவு நிகழ்வினை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு பொலீசாராலும் படையினராலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 6.15 மணிக்கு விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது அதொடர்ந்து 6.45 மணிக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

தொடர்ந்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்களால் அதே இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Related posts