செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் இன்று!

முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய கோரப்படுகொலையான செஞ்சோலை படுகொலையின் 14வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இந்த தாக்குதலில் 61 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

2006ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.

அத்தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 100 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அப்போது இந்த சம்பவம் தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

14 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த கொடிய நிகழ்வை யாராலும் மிக எளிதாக கடந்து போக முடியாது.

போரால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் 1991 ஐப்பசி 23ஆம் திகதி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எனினும், தாக்குதலில் செஞ்சோலை சிறுவர் இல்ல மாணவிகள் சிக்கவில்லை. அங்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் அழைத்து வரப்பட்டு  தலைமைத்துவ பயிற்சியளிக்கப்பட்டனர். இதை அறிந்து, 2006ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு இலங்கை அரச வான்படையின் இரண்டு கிபிர் விமானங்கள்  மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தின. ஆளில்லா விமானங்கள் அப்போது வானத்தில் வட்டமிட்டபடியிருந்தன.

இதில் 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 100இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் பலர் தற்போது சிறப்புத் தேவையுடையவர்களாக உள்ளனர்.

Related posts