நாளை கொழும்பில் 9 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோக நடவடிக்கையானது சனிக்கிழமை தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரையான காலப் பகுதியிலேயே இந்த நீர் விநியோகமானது தடைசெய்யப்படவுள்ளது.

அதன்படி கொழும்பு – 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடைசெய்யப்படுவதுடன், கொழும்பு – 11 மற்றும் 12 பகுதிகளுக்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்துடன் மேற்கொள்ளப்படவுள்ளது.

நீர் விநியோக குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

Related posts