முள்ளிவாய்க்கால் விடுதலைப் போராட்டத்தின் சின்னம்!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி வி விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற பயணத்தை இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியபிரமாணத்துடன் ஆரம்பித்துள்ளார்.

முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை காலை சென்ற விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தனது சத்தியபிரமாணம் உரையை நிகழ்த்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் முள்ளிவாய்க்கால் விடுதலைப் போராட்டத்தின் சின்னம். முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் தான் உலகு விழித்துக்கொண்டது.  இந்த இனப்படுகொலைதான் வருங்காலத்தை நிர்ணயிக்கப்போகின்றது. இதன் முக்கியத்துவத்தை விளக்கவே முள்ளிவாய்க்காலில் இருந்து தனது பாராளுமன்றத்திற்கான பயணத்தை தொடங்குவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts