மன்னாரில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது!

மன்னார் உப்பளப் பகுதி  ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (13) பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து குறித்த சடலம்  நீரில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்தே அவ்விடத்துக்கு விரைந்த பொலிசாரால் மேற்படி சடலம் மீட்கப்பட்டது.

பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Related posts