சட்டவிரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

வலஸ்முல்லப் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தெரிவிக்கையில் :-

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகளுடன் மேலும் சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் 61 வயதானவர் எனவும் இவர் இன்று (13) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts