ஐக்கிய இராச்சியத்தில் 11 வருடங்களின் பின்னர் பொருளாதார மந்த நிலை!

ஐக்கிய இராச்சியத்தில் 11 வருடங்களின் பின்னர் பொருளாதார மந்த நிலை  ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குகள் இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் காலப்பகுதியில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது, 20.4 சதவீத பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டதால் வீட்டுச் செலவுகளில் சுருக்கம் ஏற்பட்டதுடன் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தொழிற்துறைகளும் வீழ்ச்சிகண்டுள்ளன.

ஐக்கிய இராச்சியம் கடந்த 2009 ஆம் ஆண்டில் இரண்டு காலாண்டுகளில் தொழில்நுட்ப ரீதியில் பொருளாதார பின்னடைவை சந்தித்திருந்தது.  இந் நிலையில், தற்போது பாரிய பொருளாதார மந்த நிலைக்கு உள்ளாகியுள்ளது.

Related posts