இன அழிப்பிற்கான சர்வதேச விசாரணையினையினையும் நீதியினையும் நிலைநாட்ட நாங்கள் தொடர்ந்தும் இந்த மண்ணில் பயணிப்போம் – அனந்தி

இன அழிப்பிற்கான சர்வதேச விசாரணையினையினையும் நீதியினையும் நிலைநாட்ட நாங்கள் தொடர்ந்தும் இந்த மண்ணில் பயணிப்போம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சி தலைவரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வருகைதந்து இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீதி கோருகின்ற நீதிக்கான பயணம் தொடரும் என்ற பக்கத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து செய்தியினை சொல்லி நிக்கின்றார்.

இப்பொழுது புதிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவைகூட ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு தமிழ்மக்கள் ஆழாகக்கூடியவகையில் ஒரு இனவாத போக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவின் பின்னர் படையினரின் ஆதிக்கம் பல பக்கங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளது எனவே தமிழ்மக்கள் தொடர்ச்சியாக நீதி கேட்பது மட்டுமல்ல கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்குள் இருந்து எங்கள் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்ற கேள்விக்குறியும் எங்களுக்கு இருக்கின்றது.

தமிழர்களாக இன்று பாராளுமன்றம் நோக்கி பயணித்திருக்கின்ற அத்தனை உறுப்பினர்களுக்கும் தாங்கள் தமிழர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் மக்களின் இருப்பினையும் தமிழர்களின் இருப்பினையும் தற்கவைக்கவேண்டிய தேவை இருக்கின்றது இன அழிப்பிற்கான சர்வதேச விசாரணையினையினையும் நீதியினையும் நிலைநாட்ட நாங்கள் தொடர்ந்தும் இந்த மண்ணில் பயணிப்போம் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

Related posts