1,300 அடி நீளமான இரகசிய சுரங்கம்!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருந்து மெக்ஸிக்கோ வரை நீண்டு செல்லும் 1,300 அடி நீளமான நிலக்கீழ் சுரங்கப்பாதை ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வரலாற்றிலேயே கண்டுபிடிக்கப்பட்ட  அதிநவீனமான சுரங்கமாக இது கருதப்படுகிறது.

முழுமையடையாத இந்த சுரங்கம், அரிசோனாவின் சான் லூயிஸ் நகரிலிருந்து, மெக்ஸிகோவின் சான்  லூயிஸ் கொலராடோ நகரம் வரை நீண்டுச் செல்கிறது. இதனுள் காற்றோட்ட அமைப்பு, தண்ணீர் இணைப்புகள்;, மின் இணைப்புகள், தண்டவாள அமைப்பு என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பெட்ஸ் முகவரகத்தினால், கடந்த ஜூலை நடுப்பகுதியில் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் ஒரு குழியொன்றை கண்டுபிடிக்கப்பட்டது.

அரிசோனா மாநிலத்தின் யுமா நகரின் எல்லை ரோந்து முகவரகம் அந்த குழிக்கு அருகில் அகழ்வுகளை மேற்கொண்டபோது, மரக்கட்டை மற்றும் தண்ணீர் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, மர்மமான இந்த சுரங்கமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த சுரங்கத்தின் நீளம் குறித்து ஆராய 25 அடிக்கு ஒரு விசேட கெமரா உட்செலுத்தப்பட்டது.

அதனூடாக இந்த சுரங்கம் 3 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்டது எனவும் இந்த சுரங்கத்தினுள் இருந்து அமெரிக்காவின் தரைதளத்துக்கு பிரவேசிப்பதற்கு எந்த வழியும் இருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Related posts