விமான நிலையத்தில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்!

கடதாசி பெட்டியில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பொரும் தொகை போதை மாத்திரைகள் கட்டுநாயக்க விமான நிலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 24.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4,960 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் ஊடாக ஆடைகள் இறக்குமதி செய்வதாக தெரிவத்து இவ்வாறு போதை மாத்திரைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

Related posts