வயல் காணி துப்புரவைத் தடுத்த இராணுவத்தினர்!

முல்லைத்தீவு,  ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை பகுதியிலுள்ள கறிவேப்பமுறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும், நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகள் துப்புரவு செய்யும்போது, கடந்த வாரம் இராணுவத்தினர் குறித்த வயற்காணிகளைத் துப்புரவு செய்வதைத்  தடுத்துள்ளனர்.

இராணுவத்தினுடைய குறித்த அடாவடிச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் ஒதியமலை கிராமத்துக்கு நேற்று (11) மாலை பயணம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்ததோடு விவசாயிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அத்தோடு வனவள திணைக்களத்தினால் வசிப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள வவுனியா வடக்கு காஞ்சூரமோட்டை கிராம மக்களையும் சந்தித்து  மற்றும் அபகரிப்புக்குள்ளாகி வரும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் ஆகியவற்றுக்கும் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தனர்.

Related posts