யாழ், சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு!

இந்தியாவிலிருந்து படகுமூலம் நாட்டுக்கு வருகை தந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (11) செவ்வாய்கிழமை உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் (வயது-50) என்பவரே நீரிழிவு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

 

Related posts