டோனியின் தலைமைத்துவத்தை புகழ்ந்த முரளி!

டோனியின் தலைமத்துவ அணுகுமுறை, கோட்பாடுகள் மிகவும் அருமையாக இருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இளம் வயதில் மிகவும் திறமையாக வென்று கொடுத்தார். அவருடைய தலைமைத்துவ அணுகுமுறையானது பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

பந்து வீச்சாளர் நன்றாக வீசிய பந்தை துடுப்பாட்டவீரர் ஆறு ஓட்டங்கள் அடித்தால் பந்து வீச்சாளரை கைதட்டி பாராட்டுவார். நன்றாக வீசிய பந்துக்கே ஆறு ஓட்டங்கள் வரும் என பந்து வீச்சாளரை பாராட்டுவார். இதுபோன்ற பாராட்டுகள் எல்லோரிடமும் இருந்து வராது. சகவீரரின் தவறை ஏனையோர் முன் சொல்லாமல் தனியே அழைத்துச் சொல்லுவார்.

அணியின் சீனியர்கள் கூறும் கருத்துக்களை செவிமடுப்பார். அணியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதற்கு என்ன தேவை என்பதில் அவர் மிக கவனமாக இருப்பார்” என்றார்.

Related posts