உலகக்கிண்ண கால்பந்து: தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!

அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த கட்டார் உலகக்கிண்ண போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

FIFA கட்டார் உலகக்கிண்ண கால்பந்து 2022-இல் நடைபெறவுள்ளது. அதேபோல், ஆசியக்கிண்ண கால்பந்து 2020-இல் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெறவிருந்தது.

கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021-ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெறவிருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும்.

FIFA மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

Related posts