இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியது!

இந்தோனேசியாவில், கடந்த 3 நாட்களில் தொடர்ந்து 2ஆவது முறையாக சுமத்ரா தீவிலுள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்து சிதறியது.

இதையடுத்து சுமார் 5,000 மீற்றர்  உயரத்துக்கு வானில் கரும்புகை சூழ்ந்துள்ளதால்  சுமார் 3 கிலோமீற்றர் சுற்றளவிலுள்ள  குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் இவ் எரிமலை வெடிப்பினால்  எவ்வித பாதிப்பும் ஏற்படாதபோதும், அருகிலுள்ள  குடியிருப்புகளில் சிதறியுள்ள சாம்பலை  அகற்றும் பணியில் பொதுமக்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts