அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்!

அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். அந்தவகையில் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளைக் கொண்ட அமைச்சரவை பதவிப் பிரமாணம், நாளை (12), வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

உரிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் அடங்கும்.

Related posts