வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!

வவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியும், சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உட்புகுந்த மர்ம நபர்கள் முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியுடன் அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Related posts