யாழ் சிறுமி கனடாவில் கின்னஸ் சாதனை!

யாழ். அனலைதீவைச் சேர்ந்த பாலசிங்கம் ரதன் – வரதராஜன் வசந்தி தம்பதிகளின் இளைய புதல்வியான சிறுமி கனடாவில் கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

11 வயது நிரம்பிய சங்கவி ரதன் என்ற தமிழ் சிறுமியே இந்த சாதனையை நிகழ்த்தியவராவார்.

இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்திய அவர் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி கனடா மிஸிஸாகா நகரில் கின்னஸ் சாதனை நிறுவனப் பிரதிநிதிகள் முன்னிலையில் 55 நிமிடங்களில் 30 தடவைகள் 3×3 றூபிக்கின் கனசதுரத்தினை ஒழுங்குபடுத்தி, 25 தடவைகள் என்றிருந்த முன்னைய கின்னஸ் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

Related posts