முன்னாள் அமைச்சர் மேர்வினின் மகன் கைது!

வர்த்தகர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது.

வர்த்தகர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் மேர்வின் சில்வாவின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக பிரபல வர்த்தகர் ஒருவரிடம் பணம் கோரி தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் மாலக சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் . இது தொடர்பில் குறித்த வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமையாலும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts