மேர்வினின் மகனை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபட்டுள்ளது.
பத்தரமுல்லையை சேர்ந்த வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் மேர்வின் சில்வாவின் மகனை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மாலகவை கைதுசெய்வதற்காக பொலிஸார் மேர்வின் சில்வாவின் வீட்டுக்கு சென்றனர் எனினும் அவரும் தந்தையும் அங்கு இல்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதி வழங்குமாறு வர்த்தகர் ஒருவரை மேர்வின் சில்வாவின் மகன் அச்சுறுத்தினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூன் 9 ம் திகதி தொலைபேசி மூலம் மாலக இந்த வேண்டுகோளை அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

எனினும் குறிப்பிட்ட வர்த்தகர் தனது வர்த்தகம் நஷ்டத்தில் காணப்படுவதால் தன்னால் பணம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். எனினும் மாலக்க தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்ததுடன் இறுதியில் மிரட்டல் விடுத்துள்ளார். ஜூன் 15 ம் திகதி மேர்வின் சில்வாவின் மகன் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வர்த்தகர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related posts