முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு !

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. நீண்ட காலமாக நிலவி வரும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (11) காலை 8 மணி முதல் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக பல தடவைகள் அறிவித்த போதிலும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மாத்திரம் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பினால், நோயாளர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Related posts