தீ விபத்தில் தொழிலாளர் குடியிருப்புகள் எரிந்து நாசம்!

லிந்துலை –  பம்பரக்கலை மத்திய பிரிவில் நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தீவிபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடைமைகளுக்கு தேதம் ஏற்பட்டுள்ளன.

Related posts