யாழில் வெள்ளை வானில் யுவதி கடத்தல்!

யாழ். நீர்வேலியில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த  யுவதியை (20 வயது) பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related posts