நாட்டில் 2897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இன்று (10) இதுவரை 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,867 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 2,579 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களில் 252 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை,  58 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்  இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts