தேசிய பட்டியல் விவகாரம்; சித்தார்த்தனும் எதிர்க்கிறார்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் தன்னிச்சையாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனத் தெரிவு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் பங்காளிக் கட்சிகளாக புளொட் மற்றும் டெலோ கட்சிகளுக்கும் அறிவிக்கப்படாமலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (09) மாலை அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயெ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

தமக்கு அறிவிக்கப்படாமல் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமைக்கு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராஜாவுக்கு வழங்குவதே சிறப்பானது எனவும், இதுகுறித்து பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts