தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரனே காரணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சுமந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றினால் தமிழரசு கட்சி மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து பயணிக்கும் வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பிற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts